5 வயது சிறுமி அடித்துக் கொலை..!! காரணம் என்ன..??

5 வயது சிறுமி அடித்துக் கொலை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஒரு ஆடவர் அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த 5 வயது சிறுமியான ஆயிஷா மற்றும் அவளது தம்பியை அடித்து சுமார் இரண்டு ஆண்டுகள் வரை துன்புறுத்தியுள்ளார்.

இதற்கு உடந்தையாக அவரது இரண்டாவது மனைவியும் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் இரண்டு குழந்தைகளையும் அடைத்து வைத்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பசியால் அந்த குழந்தைகள் அவர்களது மலத்தை சாப்பிடும் நிலை உண்டாகி உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் இருவரையும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

ஆயிஷா 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்து விட்டாள். அவ்வப்போது அந்த சிறுவனை சுமார் பத்து மாதம் வரை கழிப்பறையில் அடைத்து வைத்திருந்தனர்.

ஆயிஷாவின் மரணத்தை மறைப்பதற்கு, ஆயிஷாவின் தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் ஆன 35 வயது பெண்ணும் திட்டம் தீட்டினர்.

இது குறித்த காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நேரத்தில் ஆயிஷாவின் தந்தையால் தமக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக பொய்யான புகாரை அவரது கணவர் மீது சுமத்தினார்.

விசாரணையின் போது இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டதால், தந்தைக்கு ஆயுள் தண்டனையும் உடன் இருந்து உதவிய இரண்டாவது மனைவிக்கு 6 ஆண்டுகள் மூன்று மாத சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK