சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று (ஜூலை 10) இரவு தனது இணையதளத்தில் ஒவ்வொரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தது. தைவானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுடன் கூடுதலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று ஜூலை 11 சீனாவின் ஸ்ட்ராங்காய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் SQ 828, SQ 830, SQ 832 மற்றும் SQ 836 ஆகிய விமானங்களும் ஷாங்காயில் இருந்து புறப்படும் SQ 831, SQ 833 மற்றும் SQ 835 ஆகிய விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஷாங்காயில் இருந்து சிங்கப்பூருக்கு நாளை (ஜூலை 12) காலை வர இருந்த SQ 825 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 12 அன்று சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய்க்கு செல்லும் SQ 826 விமானத்தின் புறப்படும் நேரம் ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 13-ஆம் தேதி ஷாங்காயிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் SQ 827 விமானத்தின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பாவி சூப்பர் புயலின் தாக்கம் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது அடுத்த இரண்டு நாட்களுக்கு சீனாவின் ஷாங்காய்க்கு சென்று வரும் 8 விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கான மற்ற இரண்டு விமானங்களின் புறப்படும் நேரங்களும் மேற்கூறியவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கணிக்க முடியாத சூழ்நிலை மற்றும் பிற விமானங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் சமீபத்திய விமான தகவல்களுக்கு தனது இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அந்நிறுவனம் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்கள் சிங்கப்பூருக்கும் தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற இடங்களுக்குமான பல விமான சேவைகளை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் அல்லது முழு தொகையும் திரும்ப பெற விண்ணப்பிக்கலாம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் தொடர்ந்து மாறி வருவதால் பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன் தங்களின் விமான நிலவரத்தை Changi Airport Website அல்லது அதிகாரப்பூர்வ பக்கங்களில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.