போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

ஜப்பானில் உள்ள ஒரு அமைச்சரவை அலுவலக வாகனம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கார் விபத்தானது நேற்று முன்தினம் (22.01.26) டோக்கியோவின் மினாடோ வார்டில் உள்ள அக சாகாவில் இருக்கும் ஒரு போக்குவரத்து சந்திப்பில் மாலை சரியாக 6:35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடமானது சரியாக டோக்கியோ மெட்ரோ கின்சா பாதையில் இருக்கும் டோரனோமோன் நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும் அரசாங்க அலுவலக கட்டிடங்கள், அமெரிக்க தூதரகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அருகே உள்ளது.

இந்த சம்பவமானது அமைச்சரவை அலுவலக வாகனத்தை ஓட்டி வந்த 69 வயதான ஒப்பந்த ஓட்டுனர் போக்குவரத்து விளக்கில் சிவப்பு விளக்கு எரிந்ததை மீறி சந்திப்பிற்குள் நுழைந்துள்ளார். இதனால் டாக்ஸிகள் மற்றும் குப்பை லாரிகள் உட்பட பிற வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது குறித்து அருகில் உள்ள டேஷ்கேமில் இருந்து காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்தில் டாக்ஸி ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் 20 முதல் 60 வயதில் வரையிலான 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் படி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய காரணத்தினால் மரணம் அல்லது காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK