வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அப்பர் தாம்சன் சாலையில் வெள்ளிக்கிழமை(23.01.26) காலை ஒரு நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றது.
ஐந்து குஞ்சுகளுடன் சாலையை கடக்க முயன்ற தாய் கோழிக்கு உதவியாக, அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டுநர்கள் உடனடியாக வாகனங்களை நிறுத்தி வழிவிட்டனர்.
காலை 9:10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காணொளி, yolo_thuswetravel என்ற நெட்டிசனால் டிக்டோக் தளத்தில் பகிரப்பட்டது.
காட்சிகளில், தாய் கோழி தனது குஞ்சுகளுடன் பாதசாரி கடவையை கடந்து மூன்றாவது பாதையை அடைந்தபோது, போக்குவரத்து நெரிசலால் குஞ்சுகளிலிருந்து பிரிந்து ஆபத்தான நிலைக்கு சென்றது.
அச்சமயம்,முன்னால் சென்ற ஒரு லாரி நிறுத்தப்பட்டு,அதில் இருந்த பயணி கையை நீட்டி அருகிலிருந்த மற்ற வாகனங்களையும் நிறுத்துமாறு சைகை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வேகத்தை குறைத்து,தாய் கோழியையும் குஞ்சுகளையும் பாதுகாப்பாக நடைபாதைக்குத் திருப்பி அனுப்ப உதவினர்.
இந்த பதிவு வெளியான பின்னர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 700 கருத்துகள் பதிவாகியுள்ளன.
பல நெட்டிசன்கள், வாகன ஓட்டுநர்கள் காட்டிய மனிதநேயத்தை பாராட்டியுள்ளதுடன், இப்படியான காட்சி மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.