சிங்கப்பூரில் பிரபலம் உணவகம் மூட உள்ளதாக தகவல்..!! அரசு எடுக்கும் புதிய வழி..!!
சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபலமான நாசி பாடாங் உணவகமான “வாராங் நாசி பாரியாமன்” கிட்டத்தட்ட 78 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஜனவரி 31) மூடப்படுவதாக நகர மறு சீரமைப்பு ஆணையம்(URA) ஆனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தது.
இந்த உணவகத்தை இயக்கி வருகின்ற குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வேறு மாற்று வழிகளை கண்டறியவும் அரசாங்கமானது உணவகம் நடத்துபவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதா? அல்லது அதனுடைய பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பதற்காக வேறு ஏதேனும் உதவிகளை வழங்க வழியுள்ளதா? என்பது குறித்தும் அரசானது ஆலோசனை நடத்தி வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சுல்தான் மசூதிக்கு அருகாமையில் 738 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஒரு கடை வீட்டில் இந்த உணவகமானது அமைந்திருக்கிறது.
இந்த உணவகமானது நிரந்தரமாக மூடப்படும் என கடை உரிமையாளர்கள் ஏற்கனவே ஜனவரி 21ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தனர்.
பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வணிகங்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த உணவகத்தை ஆதரித்து URA அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அனைத்து வணிகங்களைப் போலவே ஊழியர்கள் மூலப் பொருள்களுக்கான உயரம் செலவுகள் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நுகர்வோரின் தேவைகள் ஏற்படும் மாற்றம் போன்ற பல்வேறு சவால்களையும் பாரம்பரிய வணிகங்கள் எதிர்கொண்டு வருவதை அரசாங்கம் தற்போது உணர்ந்துள்ளதாக URA கூறியது.