புனித ரமலான் நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்க உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள தமிழ் பள்ளிவாசல்களில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கலாம் என்பதை முஃப்தி அறிவித்திருக்கிறார்.
வானியல் கணக்கீடுகளின் படி பிப்ரவரி 17ஆம் தேதி சூரியன் மறைவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே பிறை மறைந்து விட்டது என்பதையும் சிங்கப்பூர் முப்தி டாக்டர் நஸ்ருதீன் முகமது நசீர் தெரிவித்திருக்கிறார்.
அதனோடு சிங்கப்பூரில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் போற்றுதலுக்குரிய ரமலான் மாத வாழ்த்துக்களை அவர் கூறியதோடு தொழுகை அறப்பணிகள் நன்றியுணர்வு மூலமாக முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுடைய இறைப்பற்றையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் ஆறும் இந்த புனித மாதத்தை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் பள்ளிவாசல்கள் நோன்பு திறப்பு மற்றும் சிறப்பு தொழுகைகளுக்காக தற்போது தயாராகி கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் 11 சமையல் கலைஞர்கள் தினசரி 2000 பேருக்கு சத்தான நோன்பு கஞ்சியையும் இந்திய உணவுகளையும் தயாரித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நோன்பு திறப்பிற்குப் பிறகு இரண்டு முறை முஸ்லிம்கள் அனைவரும் தராவீஹ் தொழுகைகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இமாம் ஃபாரூக் அகமது தலைமையில் 30 நாட்களும் தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்பட உள்ளது.