பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு..!! பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்கள் இன்று முதல் (பிப்ரவரி 25) மின் இலக்க பயண அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பயண அனுமதி சீட்டை பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
மின் இலக்க பயண அனுமதிக்கும் கட்டணம் 16 பவுண்டு($27) ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த அனுமதி சீட்டு கட்டாயம் ஆகும்.
வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் அயர்லாந்து குடிமக்கள் அல்லது பிரிட்டனில் நிரந்தரமாக வசிப்பவர்கள் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
பிரிட்டனின் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மின் இலக்க பயண அனுமதி சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும் என அந்நாட்டினுடைய குடிநுழைவு அமைச்சர் மைக் டாப் கூறியுள்ளார்.