சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை அனுமதி சீட்டின் மூலம் வந்த சீன நாட்டவர் சென் யிரென், பின்னர் ஒரு சர்வதேச குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான அவர், குற்றக் குழுவிற்காக சுமார் S$11.6 மில்லியன் பணத்தை கையாண்டதுடன் சீனாவைச் சேர்ந்த மூன்று கணினி ஊடுருவல் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இவ்வழக்கில் அவருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனையும் S$8,000அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் லஞ்சம் பெற்றல், வேலை அனுமதி பெறும்போது பொய்யான தகவல் அளித்தல், செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் வேறு பணியில் ஈடுபடல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனை வழங்கும் போது நீதிமன்றத்தால் கருத்தில் கொள்ளப்பட்டன.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிங்கப்பூருக்கு வந்த சென் யிரென், கோவாடா பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் செயல்முறை பராமரிப்பு மற்றும் கட்டுமான பணியாளராக வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தார். ஆனால் அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றாமல், தனிப்பட்ட முறையில் வேறு வாய்ப்புகளைத் தேடியுள்ளார். பின்னர் வனுவாட்டு நாட்டைச் சேர்ந்த சூ லியாங்பியாவோவை சந்தித்து, புக்கிட் தீமா பகுதியில் உள்ள ஜாலான் கம்போங் சான்டெக் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை குற்றச் செயல்களுக்கான தளமாக மாற்ற உதவினார்.
2022 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை, 23 முறைகளுக்கு மேல் ரொக்கமாக மொத்தம் S$11.6 மில்லியன் தொகையை அவர் பெற்றுள்ளார். மவுண்ட் சினாய் பகுதியில் உள்ள ஒரு பெரிய இல்லம் உட்பட பல சொத்துகளுக்கான வாடகை தொகைகள் செலுத்தப்பட்டு, அவை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டன. சீனாவைச் சேர்ந்த மூன்று கணினி ஊடுருவல் குற்றவாளிகள் அங்கு தங்கி செயல்பட்டனர்.
விசாரணையின் போது அதிகாரிகள் 414 மதுபான பாட்டில்களை கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு குறைந்தது S$ 7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, வெளிநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தி செயல்படும் சர்வதேச குற்றவியல் வலையமைப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
