சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!!
மலேசியாவின் ரிங்கிட் மதிப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பை விட அதிகரித்துள்ளது.
ரிங்கிட் மதிப்பானது இன்று (மார்ச் 18) 0.2% அதிகரித்து சிங்கப்பூர் டாலருக்கு 3.0615 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிங்கிட் மதிப்பு உயர்வுக்கான காரணங்கள்: 👉🏻செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய நேரடி வெளிநாட்டு முதலீடும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பும் மலேசியாவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.இந்த காரணங்களால் ரிங்கிட் மதிப்பானது உயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
👉🏻வட கடலில் இருந்து கிடைக்கும் உயர்தர வகையான பெரண்ட் கச்சா எண்ணெயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், எரிபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடான மலேசியாவின் ரிங்கிட் மதிப்பானது அதிகரித்து இருக்கிறது.
இதுகுறித்து கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: “ஆசியாவிலேயே சிறந்த செயல்திறன் மிக்க நாணயங்களில் ஒன்றாக மலேசிய ரிங்கிட் இந்த ஆண்டு இருக்க வேண்டும்” என்று பன்னாட்டு நிதி சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸின் ஆராய்ச்சியாளர்கள் மார்ச் 14-ம் தேதி அன்று குறிப்பிட்டுள்ளனர்.
எண்ணெய் உற்பத்தியில் சிங்கப்பூர் உட்பட பெரும்பான்மையான ஆசிய நாடுகள் இறக்குமதியாளர்களாக இருக்கின்றனர்.
எரிபொருட்களின் செலவானது அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றின் நாணய மதிப்பானது குறைகிறது.
சிங்கப்பூரும், மலேசியாவும் வணிக ரீதியாக நெருங்கிய உறவுகளாக இருப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் நிலப் போக்குவரத்தானது உலகின் மிக பரபரப்பான ஒன்றாக இருப்பதாலும் சிங்கப்பூர் வெள்ளி மற்றும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.