சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வசித்தவர்களுக்காக உதவிய குற்றத்திற்காக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
26 வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆடவர் பாங் காங் ருய், 32 வயதான சிங்கப்பூர் பெண் சியா காய் ஹூவெய், ஆகியோர் 33 வயதைச் சேர்ந்த மலேசியா ஆடுவதற்கு தஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் அங்கு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சென்ற ஆண்டு (2025) ஜூன் 10ஆம் தேதி வரை தங்கியிருந்தது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பாங் மற்றும் சியா ஆகியோர் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ எட்டில் உள்ள அவர்களது வீட்டில் மலேசிய நபரை வசிக்க அனுமதித்தது குறித்து விசாரணையின் போது தெரியவந்தது. இது முதல் வழக்கு ஆகும்.
இரண்டாவது வழக்காக, வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 40 வயது சீனாவை சேர்ந்த பெண் சியெ ஷெங்ஹுவா மீது 42 வயதைச் சேர்ந்த சீன ஆடவர் சாங் அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாங்கின் சிறப்பான அனுமதி அட்டை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி காலாவதி ஆனது. சியெ அவரை 10 பிரின்ஸப் லிங்கில் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார் பின்னர் அங்கே கடந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில் இருந்து இந்த ஆண்டு 14 ஜனவரி வரை அடைக்கலம் கொடுத்துள்ளார்.