ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

பெண்ணைக் குத்திய பின்பு அவரே அவரை கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்.

இருவரது கழுத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவருக்கும் வயது 20 – ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கத்தியால் குத்திய நபர் அவரது இரு கைகளிலும் கத்திகளை ஏந்தி இருந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வினோத சம்பவத்தால் அந்தக் கடையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK