இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்று (மார்ச் 28) இரவு 7:05 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாலையில் சென்ற மூதாட்டி மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் காயமடைந்த 74 வயதுடைய மூதாட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 33 வயதுடைய கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த படம் ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.அதில் சாலை நடுவே ஒருவர் கிடப்பது போன்றும், அவரை சுற்றி மருத்துவ வாகனங்கள் இருப்பது போன்றும் தெரிகிறது.