ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!!

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!!

சிங்கப்பூர்: விமான போக்குவரத்து மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை பாதிக்கும் மத்திய கிழக்கு சூழலுக்கு நடுவே, இந்த ஆண்டு (2026) ஹஜ் யாத்திரை பயணத்திற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்றால் தகவல் குறித்த இஸ்லாமிய விபரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைசல் ஒரு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளார்.

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழ்நிலையால் ஏற்படக்கூடிய எதிர்பாராத சூழ்நிலையை சமாளிப்பதற்காக அதிகாரிகள் அதற்கான மாற்று வழிகளையும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஃபைசல் தெரிவித்துள்ளார்.

ஜாலான் பெசார் GRC இன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பூன் லேஜா அவர்கள் நாடாளுமன்றத்தில் சில கேள்விகள் எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஃபைசல் கூறிய தகவலானது, சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் மத்திய கிழக்கில் நிலவுகின்ற சூழ்நிலை குறித்த கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம், சிங்கப்பூர் இஸ்லாமிய பயண முகவர்கள் சங்கம், நியமிக்கப்பட்ட ஹஜ் பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சவுதி அரேபியாவிற்கு சென்ற வருவதற்கான நேரடி விமானங்களுக்கு ஏற்பாடு செய்தல், குறைந்த இடையூறு ஏற்படுத்தும் தரைவழி போக்குவரத்து வழிகளை தேர்வு செய்தல், மதீனா, மெக்காஹ், ஜித்தா ஆகியவற்றிற்கு இடையேயான பயணங்களுக்கான ஒருங்கிணைப்பை யாத்திரிகர்களுக்கு வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் இது போன்ற நிலைகளில் பணத்தை திரும்ப பெறுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சவுதி சேவை வழங்குனர்களுடனும் இணைந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து தொடர்புடைய இடையூறுகள் மற்றும் பிற எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க அவசர கால திட்டங்களை வகுக்கவும் இஸ்லாமிய மன்றம் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஃபைசல் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய சபை யாத்திரிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் சமீபத்திய ஏற்பாடுகள் குறித்த தகுந்த நேரத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK