திரையுலகில் அஜித்தின் புதிய பரிணாமம்..!!

திரையுலகில் அஜித்தின் புதிய பரிணாமம்..!!

“குட் பேட் அக்லி” படத்திற்குப் பிறகு அஜித் அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ஆனால் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக முடிவாகிவிட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் போன்றவை அஜித்தை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டின.

ஆனால் தற்போது 3 தயாரிப்பு நிறுவனங்களுமே அஜித்தை வைத்து படம் எடுப்பதில் ஒதுங்கி விட்டன. காரணம் அஜித் கேட்ட சம்பளம்.

அஜித் படத்திற்கு கேட்ட சம்பளத்தைத் தர 3 தயாரிப்பு நிறுவனங்களுமே முன்வரவில்லை. தயாரிப்பு நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டபோதும் அஜித் அதற்கு ஒத்து வரவில்லை.

அஜித் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தயாராக இல்லாததால், சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளதாக அஜித் முடிவு செய்துள்ளார்.

தன் படங்களைத் தானே தயாரித்து அதில் நடிக்க இருப்பதாக அவர் முடிவெடுத்துள்ளார்.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அவரின் கார்பந்தய வாழ்க்கைக் குறித்த ஒரு ஆவணப்படத்தை பிரம்மாண்டமான திரைப்படமாகத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் தயாரித்து நடிக்கும் சொந்த படமானது, அடுத்த மாதத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK