தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள காரணத்தினால் இரவில் மட்டும் இன்றி பகலிலும் Fan மற்றும் Ac போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதே இந்த மின் பயன்பாட்டின் உயர்வுக்கு காரணமாகும்.
வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்க உள்ளதால் மின் தேவை 23,000 மெகா வாட் வரை உயிரை கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சார வாரியம் கூறியதாவது: மின்விநியோகத்தில் எவ்வித தடையும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டாலும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் மின்தடையால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக கொளத்தூர், அண்ணா நகர் மேற்கு, வானகரம் மற்றும் சிட்லபாக்கம் போன்ற இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு நீண்ட நேரம் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த தற்காலிக மின்தடைகளுக்கு போதிய மின்சாரம் இல்லாதது காரணம் அல்ல எனவும், உள்ளூர் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளே இதற்கு காரணம் எனவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.மிக அதிகப்படியான மின்னழுத்தத்தை தாங்க முடியாமல் உள்ளூர் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்பட்ட பழுதுகளே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்ககூடும் என்பதால் மின்சார தேவை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்வாரியம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் பழைய மின் விநியோகக் கட்டமைப்புகளை முழுமையாக மேம்படுத்தினால் மட்டுமே, இது போன்ற உச்சமின் தேவையின் போது ஏற்படும் திடீர் மின்தடைகளைத் தவிர்க்க முடியும் என்பது சமூகப் பணியாளர்களின் கருத்து.