சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!
சிங்கப்பூர் : தமன் தேசா கார்டன் சாலையில் ஒரு டிப்பர் லாரி கவிழ்ந்துள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை பராமரிப்பதற்காக நில போக்குவரத்து ஆணையம்(LTA) பணியாளர்களையும்,காவல்துறையினரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த விபத்து குறித்த காணொளியானது ஒரு டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில் இடதுபுற சாலையில் ஒரு டம்ப் ட்ரக் கவிழ்ந்து கிடப்பது தெரிகிறது.
அதன் அருகில் பல சட்ட அமலாக்க அதிகாரிகள் இருப்பதும் தெரிகிறது. மற்றொரு டிரக் வலதுபுறச் சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சம்பவ இடத்தில் போக்குவரத்து கூம்புகள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூரோங் டவுன் ஹால் சாலை மற்றும் தமன் தேச கார்டன் சாலை சந்திப்பில் ஒரு டம்ப் ட்ரக் சறுக்கியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியுள்ளது. இந்த விபத்தானது இந்த மாதம் 7- ஆம் தேதி மாலை 4:50 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.