சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!!இரண்டாக உடைந்த கார்..!!

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!! இரண்டாக உடைந்த கார்..!!

சிங்கப்பூரில் கிளமெண்டி பகுதியில் ஒரு கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 2 கார்கள் சம்பந்தப்பட்டுள்ளது.

இரண்டு கார்களில் ஒன்று சாலையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதில் வாகனம் கடுமையாக சேதம் அடைந்த இரண்டாக உடைந்துள்ளது. அந்த கார் ஓட்டுநர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது சியோஹாங்ஷுவில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களில் ஒரு கருப்பு ஜாகுவார் செடான் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

மரத்தின் அடி காரின் நடுவில் இருப்பது போல் அந்த புகைப்படங்களில் தெரிகிறது. அந்த கார் கிட்டத்தட்ட இரண்டாக உடைந்துள்ளது. அதன் கூரை முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்தில் பல தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதும் தெரிகிறது. இந்த விபத்தானது மிகவும் கொடூர விபத்தாக நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை 6:10 மணியளவில் கிளமென்டி சாலையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் இந்த 2 கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த விபத்தில் 56 வயதான கார் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல் ஆனது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) நேற்று மாலை 6:15 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, பெஸ்ட் கோஸ்ட் சாலைக்கு பின்னால் உள்ள கிளமெண்டி இரண்டாவது சாலையில் விபத்து நடந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF வீரர்கள் விபத்தில் சிக்கிய ஒருவரை தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK