சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..??
சிங்கப்பூரில் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் காவல்துறை இணைந்து புங்கோல் பகுதியில் ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையானது மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்டவிராத நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் முடிவில் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட பட் பேருக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர்களின் 11 வயது சிறுவனும் அடங்குவான்.
இந்த நடவடிக்கையின் போது எட்டோமிடேட் தொடர்பான குற்றத்தில் அந்த சிறுவன் இரண்டாவது முறையாக ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அந்த 11 வயது சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுவனுக்கு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவன் இரண்டாவது முறையாக போதை பொருள் எடுத்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டது.
4 மின்சிகரெட் சாதனங்களும் அவற்றுக்கான உபகரணங்களும், எட்டோமிடேட் கலந்ததாக சந்தேகிக்கப்படும் கேபாட் கருவி ஒன்றும் சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த கேபாட் சாதனம் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகளில் சட்டபூர்வ வயதுக்கு குறைவாக புகை பிடித்ததற்காக 17 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகை பிடிப்பதை நிறுத்துவதற்கான ஆலோசனைக்காக அந்த 5 ஆண்களும் சுகாதார மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
புகையிலை மற்றும் மின்னனும் சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கடுமையானத் தண்டனைகள் சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மின்சிகரெட் குற்றம் புரிந்து பிடிபடுபவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும். எட்டோமிடேட் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட் குற்றத்தில் சிக்கியவர்களுக்கு $20,000 அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது.