உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!!

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!!

காலையில் வேலைக்குச் செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு.

அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவசரமாக, வேகமாக சாப்பிடும்போது செரிமானமாகுவதற்கு போதுமான நேரம் உடலுக்கு கிடைப்பதில்லை.

அதன் வெளிப்பாடாக வயிறு உப்புசம், அஜீரணம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகலாம். உடலுக்கும் போதிய சக்தி கிடைக்காது.
சாப்பிடத் தொடங்கும் முன்பு சில எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால் போதுமானது:


👉நிதானமாக அமருங்கள்: சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

👉குறைவாக எடுங்கள்: கையில் உணவை குறைவாக எடுங்கள். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடுங்கள்

👉நன்றாக மெல்லுங்கள்: உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லுங்கள்.

👉கைகளுக்கு ஓய்வு:ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்காதீர்கள். உணவை மென்று விழுங்கும் வரை கைக்கு ஓய்வு கொடுங்கள்


👉மூளைக்கு நேரம் கொடுங்கள்: நீங்கள் சாப்பிட்ட உணவால் வயிறு நிறைந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள மூளைக்கு போதிய நேரம் கொடுங்கள்.

👉கவனச்சிதறல்களைத் தவிருங்கள்:அவசரமாக சாப்பிடுவதையும், உணவை மெல்லும்போது பேசுவதையும், சாப்பிடும் நேரத்தில் கைபேசியைப் பார்ப்பதையும் தவிருங்கள்.

உங்கள் உடல் இயந்திரம் அல்ல. அதை கவனமாக கையாளுங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK