நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

சர் ராஃபிள்ஸ் என்பவர் நவீன சிங்கப்பூரை நிறுவியவர் என போற்றப்படுகிறார் இவர் என் சிலையானது சிங்கப்பூர் ஆற்று ஓரத்தில் அமைந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர் 1819 ஆம் ஆண்டு முதன் முதலில் இங்கு கால் வைத்ததாக வரலாறு கூறுகிறது.

ஜூன் 30-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை சிலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் பயணத்துறை கழகம் ஆனது இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வேலையில் சிலையுடன் பொதுமக்கள் நிழல் படங்களை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலை நிலவரத்திற்கு ஏற்றார்போல், சிலையின் பராமரிப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தேதிக்கு மாற்றப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் சிலம் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் இதன் தொடர்பில் பொதுமக்களின் புரிந்துணர்வை நாடுவதாக சிங்கப்பூர் பயணத்துறை கழகமானது தெரிவித்திருக்கிறது.