சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…??

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா...??

சிங்கப்பூரில் வருகை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சிங்கப்பூருக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் கடந்த மாதம் 12 லட்சம் சர்வதேச பயணிகளை வரவேற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டுடன் (2025) ஒப்பிடும்போது 10 விழுக்காடு குறைந்திருக்கிறது.

இந்த ஆண்டின் (2026) முதல் 5 மாதங்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கையானது 70 லட்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு மூலச் சந்தைகளில் இருந்து சுற்றுலா தேவைகளின் குறைவே ஆகும்.

மே மாதத்தில் சிங்கப்பூரின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10% குறைந்திருக்கின்றது. இதற்கு மூன்று முக்கிய மூலச் சந்தைகளாக, 205,000 வருகைகளுடன் சீனப்பெரு நிலப்பரப்பும் அதனைத் தொடர்ந்து 170,000 வருகைகளுடன் இந்தோனேசியாவும் 144,000 வருகைகளுடன் இந்தியாவும் இருந்திருக்கின்றன.

மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக 45,000 வருகைகளுடன் ஜப்பானும் அதனை தொடர்ந்து 50,000 வருகைகளுடன் அமெரிக்காவும் இருந்தது. சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் மே மாதம் குறைந்ததற்கு தொடர்ந்து விளங்கிவரும் தசாதாரண சூழ்நிலையும் பேரியல் பொருளாதார நிச்சயம் மற்ற தன்மை மற்றும் பல முக்கிய சந்தைகளின் நிலவுகின்ற பலவீனமான நுகர்வோர் நம்பிக்கையும் போன்ற சவால்களும் ஒரு முக்கிய காரணம் என சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் சிங்கப்பூருக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் குறைந்துள்ளதை காட்டியதாகவும் இதற்கு ஒரு பகுதி காரணமாக கடந்த மே மாதம் சிங்கப்பூரை நடைபெற்ற லேடி காகாவின் இசை நிகழ்ச்சி குறிப்பாக சீனப் பெரு நிலப்பரப்பு மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்ததும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு உயர்வான அடிப்படை நிலைக்கு வழிவகுத்தது எனவும் தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கின் நிலவும் சூழ்நிலை காரணமாக விமான எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது இதனால் சர்வதேச விமான கட்டணங்கள் அதிகமாக இருப்பதுடன் சில பயணிகளின் பயண நோக்கங்களும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு (2026) சீனாவில் டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் வருவதும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு பாதித்திருக்கிறது.

தற்போது உலக அளவில் சுற்றுலா சூழல் தொடர்ந்து மாறி வருவதால் இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் பார்வையாளர்களின் வளர்ச்சி குறையும் என சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் கணித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK