சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..??
சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (ஜூன் 17) முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளது. மே மாதம் 21ஆம் தேதி துவாகோங் பிளேஸ் மற்றும் புக்கிட் படோக் தெரு 31 இல் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 170 க்கும் மேற்பட்ட வரை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக வெளிநாட்டு விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து சிகரெட்டுகளை வாங்கியுள்ளார். பின்னர் அந்த விற்பனையாளர் இந்த வரி செலுத்தப்படாத சிகரெட் களக்கும் முயற்சியில் சிங்கப்பூரில் அந்த சிகரெட்டுகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டில் வைத்து அனுப்பியுள்ளார்.
அப்போது மே 21 அன்று புக்கிட் படோக் தெரு 31-ல் அந்தப் பெண் அவர் அனுப்பிய சிகரெட்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் அமலாக்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் இணையத்தில் வாங்கி சிகரெட்டுகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்திய குற்றத்திற்காக 18 வயது ஆட வரும் 19 வயது பெண்ணும் பிடிபட்டனர்.
விசாரணையின் போது இவர்கள் கடத்திய மின் சிகரெட்டுகளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. இவர்கள் கடத்திய சிகரெட்டுகள் சுங்க மற்றும் ஜிஎஸ்டி வரியின் மொத்த தொகை சுமார் $2,300 என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் சுங்கத்துறை எச்சரித்துள்ளது. சிகரெட்டுகளை ஏமாற்றி பறிப்பது லாபகரமானதாக இருக்கலாம். ஆனால் அது ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் இழப்பினை ஏற்படுத்தும்.