சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து சென்றனர்.

ராஜ கோபுரத்திற்கும் மகா மாரியம்மன் கோவிலின் கோபுரத்திற்கும் காலை 10 மணி அளவில் கலசங்களில் இருந்த நன்னீர் ஊற்றப்பட்டுள்ளது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா. சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.

அவருடன் மனித வள கலாச்சார சமூக இளையத்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸும், நீ சூன் குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதை குறிக்கின்ற விதத்தில் அங்கிருந்த பொறிக்கப்பட்ட கல்வெட்டை அமைச்சர் திரு சண்முகம் திறந்து வைத்துள்ளார். அதன் பிறகு கோவிலின் உடைய இரண்டாம் கட்ட புதுப்பிப்பு பணிகள் பற்றிய ஒரு சில காணொளியையும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK