தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

ஸ்ரீதேவியின் சாதனைப் பயணம் இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநராக (டிரைவர்) களம் இறங்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீதேவி.

திருநங்கை டிரைவர்இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கனரக வாகனம் ஓட்டும் பணியில், தற்போது பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகளும் தங்களது திறமையால் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதற்கு ஸ்ரீதேவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

பொதுவாகவே கனரக வாகனங்களை இயக்குவது சவாலானது என்ற நிலையில், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி வரை தினமும் அரசு பஸ்சை இயக்கி வருகிறார் ஸ்ரீதேவி.

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் நிறைந்த பரபரப்பான திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், எந்தவித பதற்றமும் இன்றி, தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாக பஸ்சில் ஏற்றிச் சென்று தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்.

இவருடைய இந்த அசாத்திய திறமை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.பயணிகள் வரவேற்புஅரசு போக்குவரத்து துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது சமூகத்தில் அவர்களுக்கான சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.

பஸ்சை இயக்கும் ஸ்ரீதேவிக்கு, சக ஊழியர்களும், பொதுமக்களும் பயணிகளும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பஸ்சில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இவரை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன், முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து திருநங்கை ஸ்ரீதேவி கூறியதாவது:வேலையை காதலிக்கிறேன்”இதுவரை ஆண்கள் மட்டும்தான் அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவராகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், என்னை டிரைவராக நியமித்தது பெருமிதமாக உள்ளது.

எனக்கு இது மகிழ்ச்சியான வேலை. நான் இதை வெறும் வேலையாக நினைக்கவில்லை, டிரைவர் பணியை மிகவும் விரும்பி, காதலித்து செய்கிறேன். திருநங்கையான நான் இந்த வேலைக்கு வந்ததால் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.

பயணிகளும், பொதுமக்களும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்.நான் கடந்த 2025-ம் ஆண்டு ஓட்டுநர் பயிற்சியை முடித்தேன். கடந்த ஒரு வருட காலமாக பஸ் ஓட்டி வருகிறேன். தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராகத்தான் பணியாற்றி வருகிறேன்.

எனது பணியை நிரந்தரமாக்கிக் கொடுத்தால், இந்த அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். அது எனக்கும், என் குடும்பத்திற்கும், நான் சார்ந்த திருநங்கைகள் சமூகத்திற்கும் அரசு கொடுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும்.”இவ்வாறு அவர் கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK