உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும்.

ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில் உலகின் மிகச்சிறிய தீவு நாடு எது தெரியுமா? அதுதான் ‘நவ்ரு’ (Nauru).குறுகிய நிலப்பரப்புநவ்ரு நாடு மிகச்சிறிய தீவு நாடாக மதிப்பிடப்பட்டிருப்பதற்கு அதன் நிலப்பரப்பே காரணம் ஆகும்.

வெறும் 21 சதுர கிலோமீட்டர் (8 சதுர மைல்கள்) மட்டுமே நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தத் தீவு, உலக அளவில் உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் வாடிகன் நகரம், மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது.

நவ்ரு எங்கு அமைந்துள்ளது?
நவ்ரு நாடு தெற்கு பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவிற்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் உலகிலேயே அதிக பாஸ்பேட் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாகப் பங்கு வகித்த நவ்ருவில், பாஸ்பேட் சுரங்கத் தொழில்கள் நடைபெற்ற பிறகு சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த நிலப்பகுதியாக இது மாறிவிட்டது.

சில பகுதிகளில் சுமார் 15 மீட்டர் உயரமுள்ள கரடுமுரடான சுண்ணாம்புப் பாறைகள் காணப்படுகின்றன. அதுபோல் தீவைச் சுற்றி 120 முதல் 300 மீட்டர் அகலம் கொண்ட பவளப்பாறைகளும் உள்ளன.

மக்கள் தொகை மற்றும் கட்டமைப்புஇத்தீவில் சுமார் 12,000 பேர் வசித்து வருகிறார்கள். இந்த நாட்டிற்கு அதிகாரப்பூர்வ தலைநகரம் என்று எதுவும் இல்லை. அப்படி அதிகாரப்பூர்வ தலைநகரம் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடாகவும் நவ்ரு விளங்குகிறது. ஆனால், அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய நிர்வாக அலுவலகங்கள் யாiren (Yaren) மாவட்டத்தில் அமைந்துள்ளன.

பல இந்திய நகரங்களை விட நவ்ரு அளவில் சிறியதாகும்.நவ்ருவின் வரலாறுபூர்வகுடிகள்: சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இன மக்கள் நவ்ருவில் குடியேறினர். அவற்றுள் 12 பழங்குடி இனங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கலாச்சாரத்தை உருவாக்கினர்.

ஐரோப்பியர் வருகை: 1700-களின் இறுதியில், ஒரு பிரிட்டிஷ் கப்பல் நவ்ரு தீவைச் சென்றடைந்தது. வெளியுலகத்துடன் முதல் தொடர்பை ஏற்படுத்திய பிரிட்டிஷார் இதனை ‘இனிமையான தீவு’ (Pleasant Island) என்று அழைத்தனர்.அந்நியர் ஆட்சி: 1888-ல், ஜெர்மனி நவ்ருவைக் கைப்பற்றி மார்ஷல் தீவுகளுடன் ஒரு அங்கமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

1914-ல், ஆஸ்திரேலியப் படைகள் நவ்ருவைத் தங்கள் வசப்படுத்தின. 1919-ம் ஆண்டு, ‘லீக் ஆப் நேஷன்ஸ்’ அமைப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குக் கூட்டு நிர்வாகப் பொறுப்பை வழங்கியது.

இரண்டாம் உலகப்போர்: 1942-45 காலகட்டத்தில், ஜப்பானியர்கள் நவ்ருவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது, அந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கட்டாயத் தொழிலாளர்களாகப் பணியாற்றுவதற்காக மைக்ரோனேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

சுதந்திரம்: 1968-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி நவ்ரு சுதந்திரம் பெற்று, இறைமைமை கொண்ட நாடாக மாறியது. இந்நாடு காமன்வெல்த் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் முழு நேர உறுப்பினராகவும் இணைந்தது.சிறந்த காலகட்டம் (சுற்றுலா)இந்தியாவில் இருந்து நவ்ருவுக்குச் செல்ல அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலகட்டம் சிறந்தது.

இந்த மாதங்களில் குறைந்த ஈரப்பதமும், இதமான காற்று மற்றும் மிகக் குறைந்த மழைப்பொழிவும் நிலவுவதால் சுற்றிப்பார்ப்பதற்கு உகந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் சராசரி வெப்பநிலையானது 28 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK