ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!!

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!!

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 21) அதிகாலை சுமார் 3:50 மணியளவில் ஆயர் ராஜா விரைவு சாலையை (AYE) நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் (CTE) பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறான திசையில் பயணித்த ஒரு கருப்பு நிற வேன் வந்தது.

உடனே மோதலை தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் காரை திருப்பி உள்ளார். அப்போது தவறான திசையில் வந்தால் வாகனம் விரைவுச் சாலையில் சென்ற கார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்த காணொளி பதிவானது, SG VIGILANTE முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

அந்த காணொளியில், ஒரு கார் விரைவுச் சாலையின் நடுப்பகுதியில் அதன் அபாய விளக்குகள் ஒளிர விட்டு நகர முடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையில் இருக்கும் தகவல் தெரிந்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் முன்பாகவே காரை இடித்த வேன் ஓட்டுநர் தப்பி சென்று விட்டார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் தப்பிச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விபத்து காணொளி பதிவு மூலமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK