6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..??
சிங்கப்பூர்: ஜூன் 21 அன்று கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஒன்று, அதே நாளில் அதற்கு முன்னதாக மலேசிய தலைநகரில் தரையிறங்கும் போது திடீரென டயர் பிரச்சினை வந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் அணைத்து உலக விமான நிலையத்திற்கு SQ114 விமானத்தின் வந்து இறங்கியது. இதில் விமானத்தின் இடதுபுற பிரதான தரையிறக்க சாதனத்தில் இருந்த இரண்டு டயர்களில் காற்று குறைந்து பாதிப்படைந்துள்ளது.
டயர்கள் பாதிப்படைந்ததால் அந்த விமானத்தை உடனடியாக இயக்க முடியாமல் போனது. இதனால் சிங்கப்பூரிலிருந்து மாற்று விமானம் ஒன்று கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்டது.
இதனால் வழக்கமாக மதியம் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய நேரத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டயர் பிரச்சனையால் 6 மணி நேரம் தாமதமானது.
அதில் பயணம் செய்த 152 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் இரவு 8:27 மணிக்கு புறப்பட்டது என SIA செய்தித்தாள் தொடர்பாளர் ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் அதே இரவில் இரவு 9:38 மணிக்கு சிங்கப்பூரை வந்தடைந்தது என SIA செய்தி தொடர்பாளர் ஊடகத்திற்கு பதில் அளித்துள்ளார்.
மாற்று விமானம் அமைக்கும் வரை பயணிகள் மற்றும் பணியாளர்கள் மாற்றுப்பேருந்துகள் மூலம் டெர்மினலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன் பிறகு மாற்று விமானம் மூலமாக பயணிகள் பணியாளர்கள் சென்றனர் தாமதத்திற்கு ஏற்பட்ட சிரமத்திற்காக SIA மனப்பூர்வமாக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தின் டயர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் மீண்டும் சேவைக்கு திரும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒன்பது நாட்களில் இரண்டாவது முறையாக டயர் பிரச்சினைகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற ஜூன் 13 அன்று KLIA விமான நிலையத்தில் தரையிறங்கும் போது SQ114 விமானத்தின் டயர் வெடித்ததாகவும் விமானம் தரை இறங்கிய சுமார் ஆறு மணி நேரத்திற்கு பிறகு அது நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.