SGRV என்ற Facebook பக்கத்தில் இந்த விபத்து குறித்த வீடியோவானது பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் ஜூன் 12 ஆம் தேதி மாலை சுமார் 5:30 மணி அளவில் டம்பைன்ஸ் அவென்யூ 7-இல் ஒரு கருப்பு நிற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது தெளிவாகத் தெரிகிறது.
மேலும் அந்த காணொளியில் கார் முதல் மற்றும் இரண்டாம் வழித்தடங்களுக்கு இடையே முன்னும் பின்னுமாக போவதும், கடைசியாக முதல் வழித்தடத்திற்கு அருகில் உள்ள மணல்மேட்டின் மீது மோதியது தெரிகிறது.
விபத்தில் சிக்கிய கார் மீண்டும் சாலைக்கு வந்த போது, போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த ஒரு டாக் வி மற்றும் மற்றொரு கார் மீது மோதியது. கார் மோதியதில் டாக்சி சிறிது தூரம் முன்னோக்கி சென்று நிற்பதும் அந்த வீடியோவில் நன்றாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரங்கள் விபத்தில் சிக்கிய 67 வயது ஓட்டுநரையும் 64 வயது பயணியையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்த இருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை காவல்துறை நடத்தி வருகிறது.