இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் ஒரு மருத்துவ அவசர நிலையைக் கையாண்டு கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரை அவதூறாக பேசிய ஒரு நபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2026) மட்டும் களப்பணியாளர்கள் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படும் 20 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதுபோன்ற நடத்தைகள் மீது தங்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கை இருப்பதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் முன்களப் பணியாளர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் மற்றும் வாய்மொழி
துஷ்பிரயோகங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை SCDF படையினர் ஜூன் 26 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த மூன்று ஆண்டுகளில் பணியாளர்களுக்கு எதிரான உடல் ரீதியான அல்லது வாய்மொழி துன்புறுத்தல் தொடர்பான சுமார் 120 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் (2026) இதுவரை இது போன்ற 17 வழக்குகள் நிகழ்ந்துள்ளன.


இந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் ஒரு மருத்துவ விபத்தை கையாண்டு கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரைத் தொடர்ச்சியாக ஒருவர் வாய்மொழியாக திட்டிய குற்றத்திற்காக அவருக்கு 11 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக SCDF தெரிவித்துள்ளது.

அந்த மருத்துவ பெண் உதவியாளரிடம் அந்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், ஆபாசமான கருத்துக்களையும் கூறியுள்ளார். உதவியாளர் அவரை அமைதிபடுத்த முயன்ற போதும் அந்த நபர் தொடர்ந்து அவரை வாய்மொழியாக திட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிமைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மீதான எந்த ஒரு உடல் ரீதியான அல்லது வாய்மொழி துன்புறுத்தலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும், இது போன்ற சம்பவங்களைக் காவல்துறையிடம் தெரிவிக்க ஒரு போதும் தயக்க மாட்டோம் எனவும் SCDF எச்சரித்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு வேண்டும் என்று தீங்கு விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர்களுக்கு அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK