பாகுபலி படம் மூலமாக பிரபாஸ், ராணா, அனுஷ்கா இந்திய அளவில் கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறினார்கள்.
சமீப காலமாக பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) சார்பில் வெளியான ‘பாகுபலி தி டார்ச்பேரர்’ (Baahubali: The Torchbearer) ஆவணப்படத்தின் பிரத்யேக நேர்காணலில் ராணா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
ராணா கூறியதாவது: இதை நான் பொதுவெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் ராஜமௌலி இல்லாததால் சொல்கிறேன்.’ உலகம் இன்னும் தயாராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பாகுபலி நிச்சயம் இருக்கும்’ என்றார்.
அப்போது பிரபாஸ் 3 விரல்களை காட்டியது அதற்கு அனுஷ்கா உட்பட அனைவருமே மகிழ்ச்சியுடன் சிரித்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த கலகலப்பான தருணம் பாகுபலி – 3 உருவாகலாம் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.