14 நாள் விதி இனி கட்டாயம்..!! சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு MOM இன் முக்கிய அறிவுரை..!!

14 நாள் விதி இனி கட்டாயம்..!! சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு MOM இன் முக்கிய அறிவுரை..!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை Employment Pass (EP) அல்லது S Pass மூலம் பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், முதலில் உள்ளூர் வேலைதேடுபவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் என மனிதவள அமைச்சு (MOM) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது புதிய விதிமுறை அல்ல; ஏற்கனவே நடைமுறையில் உள்ள Fair Consideration Framework (FCF)-இன் முக்கிய நிபந்தனையாகும்.

முக்கிய விதிமுறைகள்:
🔷 14 நாட்கள் வேலைவாய்ப்பு விளம்பரம்
வெளிநாட்டு ஊழியருக்காக EP அல்லது S Pass விண்ணப்பிப்பதற்கு முன், அந்த வேலைவாய்ப்பை MyCareersFuture இணையதளத்தில்(Website) குறைந்தது 14 தொடர்ச்சியான நாட்கள் வெளியிட வேண்டும்.

🔷உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை
அந்த 14 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் (PR) விண்ணப்பங்களை திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் நியாயமாக பரிசீலிக்க வேண்டும்.

🔷அதன்பிறகே வெளிநாட்டு ஊழியருக்கு விண்ணப்பம்
தகுதியான உள்ளூர் விண்ணப்பதாரர்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டுமே, நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக EP அல்லது S Pass விண்ணப்பிக்க முடியும்.

✨விதிமீறினால் என்ன நடக்கும்?
இந்த நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் Work Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மனிதவள அமைச்சகத்தின்(MOM) கூடுதல் கண்காணிப்பிற்கும் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படலாம்.

முக்கிய குறிப்பு: சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களைப் போல இது புதிய கட்டுப்பாடு அல்ல. சிங்கப்பூரில் ஏற்கனவே அமலில் உள்ள Fair Consideration Framework (FCF) விதிமுறைகளையே MOM மீண்டும் நினைவூட்டியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.