மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!!
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பொது இடங்களில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் நிறுத்தப்படும் மிதிவண்டிகள் மற்றும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் வழித்தடங்கள் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக LTA தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் விதிகளை மீறிய 186 மிதிவண்டிகள் மற்றும் தனி நபர் நடமாட்ட சாதனங்களை LTA அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
ஈஷூன் , பயா லேபார் மற்றும் செங்காங் ஈஸ்ட் போன்ற முக்கிய போக்குவரத்துப் பகுதிகளில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறாக நிறுத்தப்பட்டு இருக்கும் மிதிவண்டிகளில் முதலில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு தாள் ஒட்டப்படும். அதன் பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த மிதிவண்ட அகற்றப்படாமல் இருந்தால், அது LTA அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
பின்வரும் விதிமுறைகளை மிதிவண்டி உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என LTA அறிவுறுத்தியுள்ளது.
👉மிதிவண்டிகள் மற்றும் ஸ்கூட்டர்களை அதற்கென மஞ்சள் நிற கோடுகளால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்.
👉விதிகளை மீறி பாதசாரிகள் நடக்கும் பாதைகளிலோ அல்லது அவசர கால வழிகளிலோ நிறுத்தப்படும வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் LTA எச்சரித்துள்ளது.