சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார்.

வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற பெண்மணி.

அவர் ஓயுகி டவுன்டவுன் கேலரி கடைத்தொகுதியில் ‘வெஸ்ட் குலோசட்’ என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருள்களை வாங்கும் மற்றும் விற்கும் கடையை நடத்தி வந்தார்.


ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ, தனது கடையின் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் மிக சாதுரியமாகப் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
வணிக நடைமுறைகளை மீறி, அவர் பல்வேறு நபர்களிடமிருந்து கிட்டத்தட்ட $140,000 வரையிலான பெரும் தொகையை முறைகேடாகக் களவாடியுள்ளார்.

ஆடம்பரப் பொருள்களைக் கடையிடம் ஒப்படைத்த வாடிக்கையாளர்களுக்கான விற்பனைத் தொகை மற்றும் வணிகக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறைகேடு நடந்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பணத்தைக் கையாடல் செய்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

தன் மீதான சட்டப் பிடி இறுகுவதை உணர்ந்த குற்றவாளி ரிங்கா, தான் களவாடிய மொத்தத் தொகையில் $41,000 தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பித் தந்துள்ளார்.


எஞ்சிய பெருந்தொகையை அவர் இன்னும் திருப்பித் தராத நிலையில், நீதிமன்றத்தில் இந்த நிதி மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.