சுற்றுலாத் தலமாக மாறிய சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..! NUS, NTU அதிரடி நடவடிக்கை.!

சுற்றுலாத் தலமாக மாறிய சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..! NUS, NTU அதிரடி நடவடிக்கை.!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி கல்வி நிறுவனங்களான தேசியப் பல்கலைக்கழகம் (NUS) மற்றும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) ஆகியவற்றின் வளாகங்களுக்குள் அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லும் விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.

மூன்றாம் தரப்புப் பயணம் முன்பதிவு இணையதளங்களில், ஒரு நபருக்கு $63 முதல் $300 வரை கட்டணம் வசூலித்து இந்த அங்கீகாரமற்ற சுற்றுப்பயணங்கள் விற்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பல்கலைக்கழகங்கள் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. அமைப்பின் வருமாறு:

இந்த தனியார் சுற்றுலாப் பட்டியல்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் எந்தவிதமான அங்கீகாரமோ அல்லது தொடர்போ இல்லை.

அனுமதியற்ற தன்னிச்சையான வழிகாட்டிகள் மூலம் வளாகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

விதிகளுக்கு புறமாக செயல்படும் ஏஜென்சிகள் மற்றும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழகங்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக NUS Visitor centre போன்ற அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் மட்டுமே அனுமதிகளை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து பெருமளவில் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வளாகங்களில் குவிந்ததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பல்கலைக்கழக பேருந்துகள் நிரம்பி வழிந்ததாலும் உணகங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாலும் மாணவர்கள் தங்களின் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.

மேலும் சில சுற்றுலாப் பயணிகள் வகுப்பறைகள் மற்றும் விடுதிகளுக்குள் நுழைந்து மாணவர்களின் தனிமனித உரிமைக்கு இடையூறு விளைவித்த புகார்களும் Reddit வலைத்தளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இரு பல்கலைக்கழகங்களும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன.அவை பின்வருமாறு:
👉சுற்றுலா நிறுவனங்கள் முன்கூட்டியே தங்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்


👉பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர் தூதர்கள் (Student Ambassadors) மட்டுமே சுற்றுலாப் பயணிகளை வழி நடத்த தகுதி பெற்றவர்கள்.

👉முக்கிய பரீட்சை நேரங்கள் மற்றும் நெரிசலான மதிய வேளைகளில் சுற்றுலாப் பயணிகள், உணவகங்கள் மற்றும் பேருந்துகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.