சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் துவாஸ் கடற்பகுதியில் எரிவாயு எண்ணெயைச் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக 8 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 13) அதிகாலை 1.05 மணியளவில் சிங்கப்பூர் கடலோர காவற்படை அதிகாரிகள் துவாஸ் கடற்பகுதியில் சோதனை நடத்திய போது இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்டவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
ஊழியராக இருந்து முதலாளியின் சொத்தை திருடிய குற்றம் அவர்கள் மீது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதமும், 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூர் கடற்பகுதியில் இதுபோன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.