சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!
சிங்கப்பூர் டான்ஜோங் பகார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்து $4,000-க்கும் மேல் திருடிய 37 வயது நபர் வருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
பெக்சியா தெருவில் உள்ள உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர், அங்கிருந்த $4,095 ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று காவல்துறையினருக்கு காலை 10:20 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய மற்றும் உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் காவல்துறை கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.