நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!!
புதினா – இஞ்சி பானம் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை வீட்டில் தயாரிப்பது நமது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும். அந்த வகையில், சளி மற்றும் சுவாசப் பாதையைச் சீராக்க உதவும் ஒரு சிறந்த இயற்கை பானம் தான் இந்த புதினா-இஞ்சி பானம்.
தேவையான பொருட்கள்: ஒரு கைப்பிடி புதினா இலைகள் ஒரு துண்டு இஞ்சி எலுமிச்சை சாறு (ஒரு பழம்) 2 கப் தண்ணீர்
தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் எடுத்து வைத்துள்ள புதினா இலைகளையும், இஞ்சியையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை சுமார் 10 நிமிடங்கள் வரை நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
நன்றாகக் கொதித்ததும், பாத்திரத்தை அடுப்பை விட்டு கீழே இறக்க வேண்டும். இறுதியாக, அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறைச் சேர்த்து பருகலாம்.
இந்த புதினா-இஞ்சி பானத்தைத் தொடர்ந்து குடித்து வருவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் இதோ: சளியை வெளியேற்ற உதவும்: உடலில் தேங்கியுள்ள சளியை எளிதாக வெளியேற்ற இது பெரிதும் துணைபுரிகிறது.
தொண்டைக்கு இதம் அளிக்கும்: தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்கி, இதமான உணர்வைத் தருகிறது.