திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு...!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்...!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சனிக்கிழமை (ஜூன் 27) 2 இரவு திருச்சி வந்த ஏர்ஏசியா (AirAsia) விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கிராம் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா வகை போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதை வபறிமுதல்  செய்த அதிகாரிகள், போதைப்பொருட்களின் சர்வதேச தற்போதைய சந்தை மதிப்பானது ரூ.6 கோடி என்பதை உறுதி செய்துள்ளனர்.

போதைப் பொருளை கடத்தி வந்த பயணி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி (வயது 36)  என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, முகமது அலியை திருச்சி விமான நிலையக்காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் மற்றும் இந்த போதைப் பொருள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK