சிங்கப்பூரில் நடந்த மோதல் சம்பவம்..!! நடந்தது என்ன..??
சிங்கப்பூர்: குயின் ஸ்ட்ரீட் பேருந்து நிலையத்திற்கு அருகே ஜூன் 26 ஆம் தேதி இரு ஆடவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த காணொளி பதிவானது இன்ஸ்டாகிராமில் jjyee0728 என்ற பயனர் பதிவேற்றியுள்ளார். அந்த காணொளியில் ஒரு டாக்ஸி ஓட்டுனரும் ஒரு இளைஞரும் வாய்மொழி தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் மாற்றியதால் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்ஸி ஓட்டுனர் வண்டியை திருப்பும் போது மற்றொருவர் மீது மோத உள்ளதாக தெரிந்தது பின்னர் அந்த இளைஞர் வாகனத்திற்குள் இருந்த டாக்ஸி ஓட்டுநரை குத்தியுள்ளார். பதிலுக்கு ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி பின்னர் இருவரும் சண்டையிட தொடங்கியுள்ளனர். மேலும் பொதுமக்கள் பலர் தலையிட்டு அவர்களை பிரித்தனர்.
இது குறித்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறையினருக்கு ஜூன் 26 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3:45 மணியளவில் கிடைத்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 36 வயது மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
57 வயதைச் சேர்ந்த நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்பதையும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு குறித்து காவல்துறையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF), பான் சான் தெரு பகுதியில் உதவி தேவைப்படுவதாக ஜூன் 26 அன்று மாலை 4:15 மணி அளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். SCDF அதிகாரிகள் அங்கு வந்து ஒருவரை டான் டோக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.