கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!!

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!!

சிங்கப்பூர்: துவாஸ் நோக்கிச் செல்லும், பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜூன் 27 ஆம் தேதி அன்று நிகழ்ந்த 2 லாரிகள் மற்றும் 1 கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தால் விரைவுச் சாலையில் பரபரப்பு நிலவியது.

SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.

அந்த காணொளியில் சிமெண்ட் லாரியை இழுத்துச் செல்லும் மஞ்சள் நிற டிரெய்லர் லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அதில் 4வது பாதையில் இருந்த லாரி, முதல் பாதைக்கு விலகி மற்றொரு வாகனத்தின் மீது மோதி, இறுதியாக விரைவுச் சாலையின் மையத்தடுப்பில் சிக்கிக் கொள்வதை காண முடிகிறது.

கார் மற்றும் 2 லாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜூன் 27ஆம் தேதி அன்று மதியம் 25 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK