சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!!

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!!

சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் செப்டம்பர் வரை மின்சார கட்டணம் சராசரியாக 17 % அதிகரிக்க உள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) மற்றும் எஸ் பி குரூப் (SP Group) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு (kWh) 31.91 காசு ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 4.64 காசு அதிகமாகும்.

இதன் மூலம் HDB 4-அறை வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் சுமார் $17.14 அளவில் அதிகரிக்கும்.

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக உலக அளவில் இயற்கை எரிவாயுவின் விலை உயர்ந்ததே இந்த மின்சாரக் கட்டண உயர்விற்கு முக்கிய காரணமாகும்.

சிங்கப்பூரின் 95% மின்சாரம் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மூலமே தயாரிக்கப்படுகிறது.

மின்சாரத்துடன் சேர்த்து, வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு கட்டணமும் (Town Gas), 71% உயர்த்தப்பட்டு, ஒரு கிலோவாட்டிற்கு 23.48 காசாக அதிகரித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK