சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..??
மின்னல் மற்றும் இடி எப்போதுமே இடியுடன் கூடிய மழையின் போது அல்லது மழை இல்லாவிட்டாலும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப தாக்கலாம். சிங்கப்பூரில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
சிங்கப்பூரில் எப்போது மின்னல் வெட்டும்? சிங்கப்பூர் உலகின் மிக அதிக மின்னல் செயல்பாடு உள்ள நாடுகளில் ஒன்றாகும், இது சராசரியாக ஆண்டுக்கு 167 இடியுடன் கூடிய மழை நாட்களைக் கொண்டுள்ளது.
மின்னல் மழையின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ கூட தாக்கக்கூடும். மழை இல்லாத நேரத்திலும், இடியுடன் கூடிய மேகங்கள் இருக்கும் போது, சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் மின்னல் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
மின்னலின் போது பாதுகாப்பாய் இருப்பது எப்படி? பாதுகாப்பான இடங்களில் தங்குங்கள்திறந்தவெளியில் இருப்பதைத் தவிர்த்து, உடனடியாக உறுதியான கட்டடத்திற்குள் அல்லது உலோகக் கூரையுள்ள (Metal-topped) காருக்குள் செல்லவும்.மழை நின்ற பிறகும், கடைசியாக இடி சத்தம் கேட்டதிலிருந்து குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே திறந்தவெளி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.
நீர்நிலைகளைத் தவிருங்கள்கடல், ஏரி, நீச்சல் குளம் போன்ற நீர்நிலைகளில் மின்னல் பாய்ந்தால் ஆபத்து அதிகம் என்பதால், இடி மின்னலின் போது உடனடியாக நீர்நிலைகளை விட்டு வெளியேற வேண்டும்.
உயரமான இடங்கள் மற்றும் மரங்களைத் தவிர்க்கவும்தனியாக நிற்கும் உயரமான மரங்கள் அல்லது சிறிய கூடாரங்களின் (tent) கீழ் ஒருபோதும் ஒதுங்கக் கூடாது.மலைகள், பாறைகள் போன்ற உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்கவும்.
மின்சாரம் மற்றும் உலோகப் பொருட்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்கம்பிகள், வேலி, விளக்குக் கம்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தக்கூடிய பொருட்களிலிருந்து தள்ளி இருங்கள்.வீட்டிற்குள் இருக்கும் போது குளிப்பது, பாத்திரங்கள் கழுவுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் தொலைக்காட்சி, லேண்ட்லைன் போன் போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
திறந்தவெளியில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?கட்டடமோ, காரோ அருகில் இல்லை என்றால், மரம் அல்லது கம்பத்தின் கீழ் நிற்காதீர்கள்.பாதுகாப்பிற்காக திறந்தவெளியில் தரையில் குத்தவைத்து அமர்ந்து, காதுகளை மூடிக்கொள்ளுங்கள். ஒருபோதும் தரையில் படுக்கக் கூடாது, ஏனெனில் மின்னல் தரையின் வழியே பரவும்.
வானிலை முன்னறிவிப்பு: சிங்கப்பூரின் தற்போதைய வானிலை நிலவரத்தை உடனுக்குடன் அறிய, Meteorological Service Singapore வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது myENV செயலியையும் பயன்படுத்தலாம்.