பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் 13வது சிங்கப்பூர்க் கலை விழா…!!!

பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் 13வது சிங்கப்பூர்க் கலை விழா...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய காட்சிக் கலை விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தொடங்குகிறது.

இந்த விழாவில் பல்வேறு துறைகளிலிருந்து 160க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, பசுமை சூழல், மனநலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களும் உள்ளன.

நிகழ்ச்சியில் நகரின் இட நெருக்கடி குறித்த படைப்புகளும் இடம்பெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய கலை விழா ஒன்று கடந்த ஆண்டு வெனிசில் நடந்தது.

அங்கு நடைபெற்ற ஒரு அங்கம் இங்கு மூன்று மடங்கு பெரிய அளவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் தனித்துவமான இயற்கைச் சூழலைப் பற்றிய பத்தாண்டு கால ஆய்வின் அடிப்படையில் இந்தக் கூறு உருவாக்கப்படும்.

புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

13வது சிங்கப்பூர் கலை விழா வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கலை புரவலர்களையும் ஈர்க்கும்.

இதன் மூலம் இங்குள்ள கலைஞர்களின் திறமையை உலக அரங்கில் அரங்கேற்ற முடியும்.

இந்தக் கலை விழா நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg