சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..??

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..!?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..??

சிங்கப்பூரில் 61 வயதை சேர்ந்த ஜெங் லாங்டே நார்த் கேனால் என்ற சாலையில் ஒரு உணவு கடையை நடத்தி வந்துள்ளார். மேலும் அவர் குறைந்தது 10 பிற உணவு மற்றும் பணம் கடைகளுடன் அவர் தெருவை பகிர்ந்து வந்துள்ளார் கடைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தால் கூட அதிக எண்ணிக்கையிலான எலிகள் வந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து வணிகங்களும் எலி கட்டுப்பாட்டை தீவிரமாகவும் பொறுப்புடனும் எடுத்துக் கொள்ள விட்டால் எலிகளின் எண்ணிக்கையை திறம்பட கட்டுப்படுத்தி குறைப்பது நமக்கு கடினமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே எலிகளின் நடமாட்டத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும் எனவும் அவற்றை முழுமையாக ஒலித்துக் கட்ட வேண்டும் என்றும் உதவுவதற்காக அவர் ஒரு பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளார்.

உணவு மற்றும் பான நிறுவனங்களுக்கு எலிகளை பிடிப்பதற்கான முறைகள் குறைவாகவே உள்ளன என்றும் வெற்றிட உறிஞ்சலை பயன்படுத்தி எலிகளைப் பிடிக்கும் ஒரு புதிய வகை எலி பிடிக்கும் கருவியை சோதிக்க விரும்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கருவியின் அமெரிக்கா போன்ற பிற பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது இன்னும் சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆல் அவுட் பெஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பூச்சி மேலாண்மை நிபுணரான லியுங் கா சுயன் கூறியதாவது: உணவகங்கள் அதிக அளவில் உணவை கையாளுகின்றன மேலும் விஷம் கலந்த இறையை பயன்படுத்துவது மாசுபாட்டை ஏற்படுத்தும். இதனால் சுவர் இடுக்குகளிலும் எலிகள் இறந்தால் அதை துர்நாற்றத்தை ஏற்படுத்தி மற்றொரு பெரிய பிரச்சனையாக மாற வழிவகுக்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எலி தொல்லைகளை எதிர்த்து போராட அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டின் முதல் பாதையில் சுமார் 5400 ஆக இருந்த எலி பொந்துக்களின் எண்ணிக்கை இரண்டாவது பாதியில் 4200 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லிட்டில் இந்தியா மற்றும் ஹாலண்ட் வில்லேஜ் போன்ற அதிக எண்ணிக்கையிலான உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேசிய சுற்றுச்சூழல் முகமது பூச்சி கட்டுப்பாட்டு பிரிவின் மேலாளர் செங் இந்தப் பகுதியில் நாங்கள் நிறுவியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் தல நிலவரத்தை கண்காணிக்கவும் தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிப்பதற்கும் பின்னர் கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றும் வணிகங்களுக்கு எதிராக அமலாக நடவடிக்கை எடுப்பதற்காகவும் எங்களுக்கு உதவும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட சுமார் 1200 அமலாக நடவடிக்கையில் பாதி முறையற்ற கழிவு அகற்றுதல் தொடர்பானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி எலிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக தேசிய சுற்றுச்சூழல் முகமை 40 வெப்ப படமெடுக்கும் கேமராக்களின் நிறுவியுள்ளது.

இந்த அமலாக்க திறனை மேலும் மேம்படுத்துவதற்காக வீடியோ பகுப்பாய்வு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும், அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் உணவு மற்றும் பான கடைகளில் எலி தொல்லை பிரச்சனை ஒரு பெரும் கவலையாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு 230 க்கும் மேற்பட்ட விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. லிட்டில் இந்தியாவில் நிலைமை தற்போது மேம்பட்டு உள்ளது. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் சராசரியாக 37 எலி பொந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எலி பொந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எலிகளின் நடமாட்டமும் 40 விழுக்காடு குறைந்துள்ளது என்று அதிகாரிகள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK