கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!
கோவையில் மீன் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது சுண்டக்கா முத்தூரில் உள்ள மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்வதற்காக தயாராகி இருந்தார். விஷ்வாவுக்கு மீன் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருப்பதால் தன்னுடைய வீட்டில் மீன் தொட்டி வைத்து அதில் மீன்களை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 2) காலை சிறுவன் தூங்கி எழுந்ததும் மீன் தொட்டியைப் பார்த்து உள்ளார். அப்போது தொட்டி சற்று அசுத்தமாக இருந்ததை கண்டுள்ளார்.
அதில் தூக்கி வீசப்பட்டு அலறியபடி அச்சிறுவன் கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். அவரது உடலை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.