சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..??

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த மாதம் திடீரெனம் இரண்டு அமலாக நடவடிக்கையில் ஈடுபட்டது.

இது குறித்து இன்று (ஜூன் 2) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மே 14 ஆம் தேதி சோவா சூ காங் ஸ்ட்ரீட் 52 மற்றும் டம்பைன்ஸ் அவன்யூ 9 ஆகிய இரண்டு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தியதாக கூறியுள்ளனர்.

அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோவா சூ காங் பகுதியை ஆய்வு செய்தபோது நொறுக்கு தீனி போல ஒரு அட்டைப்பெட்டி முழுவதும் நிரப்பி வைத்து அதற்குள் வரி செலுத்தப்படாத 21,992 சிகரெட் பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த நடவடிக்கையில் மூன்று சிங்கப்பூர் ஆண்களும் நான்கு இந்தோனேசியா ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த கடையில் கண்டு எடுக்கப்பட்ட மற்றும் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகளும் விற்பனை மூலமாக கிடைத்ததாக சந்தேகத்தின் பெயரில் கிடைத்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே நாளில் டம்பென்ஸில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் சிவப்பு பிளாஸ்டிக் பைகளை இறக்கி வைத்துக் கொண்டிருப்பதை கண்டறிந்தனர் அவ்வப்போது மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் அந்த வாகனத்திற்குள் கடத்திவரப்பட்ட 4,243 சிகரெட் பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்து, சிகரெட்டுகளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட 8 நபர்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது.

சுங்கவரி சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது கொண்டு செல்வது, சேமிப்பது, உடைமையில் வைத்து இருப்பது கடுமையான குற்றத்திற்கு உரியது என்று கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு கடத்தப்பட்ட போது பிடிபட்ட சிகரெட்டுகளில் தொகையை போல 40 மடங்கு வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதமும் சிறை தண்டனையும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடத்தப்பட்ட நேரத்தின் போது பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்படலாம்.

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் மேற்கொண்ட இரண்டு அமலாக நடவடிக்கையின் போது கைப்பற்றிய 26 ஆயிரத்து 235 சிகரெட் பொட்டலங்களும் மற்றும் இந்த வழக்கில் மொத்தமாக S$585,773 மதிப்புள்ள சுங்கவரி மற்றும் ஜிஎஸ்டி வரி கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு குறித்த சந்தேகத்தில் 8 ஆண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 33 வயது முதல் 49 வயதிற்குட்பட்ட எட்டு ஆண்களின் நான்கு பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எனவும் நான்கு பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விரைவில் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK