புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! 18/02/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப் போர்த்தி தீப்பரவுவதை குடிமைத் தற்காப்புப் படையினர் தடுத்தனர்.மின்சார வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த பேட்டரியில் நேரடியாக தீயை அணைக்க சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.தீயை அணைப்பதற்காக 3 தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! தீயானது அணைக்கப்பட்டது.மின்சார வாகனம் மீண்டும் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்காக தீயணைப்பாளர்கள் அதன் மீது தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.இச்சம்பவத்தில் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த தீ விபத்து குறித்த வீடியோ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.மக்கள் தங்கள் வாகனங்களில் தீயணைப்பு கருவிகளை வைத்திருக்குமாறு குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan இலவச ட்ரைனிங்!! சிங்கப்பூரில் வேலை!!