போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்...!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவரை கைது செய்துள்ளது
ஜூன் 10 அன்று, பெண்டமியர் சாலையில் ஒரு சோதனை நடத்தப்பட்டது.
அந்த நபர் மின்சார மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அதிகாரிகளைக் கண்டதும், அவர் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்ற போது அவர் ஒரு பையை காலாங் ஆற்றில் வீசுவதைக் கண்டனர்.
அதிகாரிகள் பையை சோதனை செய்தபோது, அதில் 2,004 கிராம் கஞ்சா மற்றும் 518 கிராம் எக்ஸ்டசி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மதிப்பு சுமார் 110,200 வெள்ளி என்று கூறப்படுகிறது.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவானது சுமார் 580 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தப் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜூன் 12 அன்று கம்போங் யூனோஸில் உள்ள ஒரு காண்டோமினியத்தின் வாசலில் அவர் பிடிபட்டார்.
அதிகாரிகள் அவரின் வீட்டைச்
சோதனையிட்டதில் மேலும் பல போதைப் பொருட்கள் கைப்பற்றன.
சிங்கப்பூரில், 250 கிராம் மெத்தம்பேட்டமைன் அல்லது 500 கிராம் கஞ்சாவை கடத்துவது கட்டாய மரண தண்டனைக்கு உட்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
