அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்....

சிங்கப்பூரில் ஹாலந்தில் உள்ள பிளாக் 5 இன் 23 வது மாடி வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
இச்சம்பவம் ஜூன் 19 ஆம் தேதி மாலை சுமார் 7.25 மணிக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பாளர்கள் விரைந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரு குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த இருவரை மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீயை அணைக்கும் ஈடுபட்டு கொண்டிருந்த இரு தீயை அணைப்பாளர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தீ விபத்து காரணமாக தீ ஏற்பட்ட பிளாக்கில் இருந்து சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தற்காப்பு அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சான் சுன் சிங் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றிய குடிமைத் தற்காப்பு படையினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
