சிங்கப்பூரில் டாக்ஸி கட்டணத்தில் வரும் புதிய மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய டாக்ஸி நிறுவனமான ComfortDelGro ஜூலை 31ஆம் தேதியிலிருந்து புதிய கட்டண நடைமுறையை கொண்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் பயணத்தை ரத்து செய்தாலும் ஓட்டுநரை காக்க வைத்தாலும் மூன்று வெள்ளி வரை கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனாலும் கொஞ்ச காலத்துக்கு விளக்கு வழங்கப்படும்.
ரத்து செய்வதற்கான கட்டணம் செப்டம்பர் முதல் தேதி முழுமையாக நடப்புக்கு வரும்.
காக்க வைக்கும் கட்டணம் அக்டோபர் 15ஆம் தேதி நடப்புக்கு வரும்.
தற்போதைய நடைமுறையின் படி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு நாலு முறை வரை இலவசமாக பயணத்தை ரத்து செய்ய முடியும்.
ஆனால் டாக்ஸி வந்து விட்ட பிறகு ரத்து செய்தால் 4 வெள்ளி கட்டணம் கட்டாயம்.
புதிய முறையின் கீழ் முதல் 4 நிமிடங்களுக்கு கட்டணம் இருக்காது அதன் பிறகு டாக்ஸி காத்திருக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் 3 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும்.